மே மாதம் வெளியாகிறது டைட்டானிக் காதலும் கவுந்து போகும் திரைப்படம் 
செய்திகள்

மே மாதம் வெளியாகிறது டைட்டானிக் காதலும் கவுந்து போகும் திரைப்படம்

நடிகர்கள் கலையரசன், ஆனந்தி நடித்துள்ள டைட்டானிக் காதலும் கவுந்து போகும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

DIN

நடிகர்கள் கலையரசன், ஆனந்தி நடித்துள்ள டைட்டானிக் காதலும் கவுந்து போகும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஜானகிராமன் இயக்கத்தில் நடிகர் கலையரசன் நடித்துள்ள திரைப்படம் டைட்டானிக் காதலும் கவுந்து போகும். சி.வி.குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

நடிகர்கள் ஆனந்தி, காளி வெங்கட், மதுமிதா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் மூன்று காதல் கதைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. 
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அதன்படி மே 6ஆம் தேதி திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள விசித்திரன் திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT