செய்திகள்

''நீங்கள் எங்களைப் பார்ப்பது....'' மாமனார் குறித்து பகிர்ந்த விக்னேஷ் சிவன்

நயன்தாராவின் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

DIN

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி சமந்தா, நயன்தாரா இணைந்து நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

அனிருத் இசையில் நான் பிழை, டுடுடு பாடல்கள் மற்றும் இந்தப் படத்தின் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. 

இதனையடுத்து நடிகர் அஜித் நடிக்கும் 'ஏகே 62' படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் பணிகள் விரைில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் அவரது அப்பா, அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில் நயன்தாராவின் அப்பா குறித்து அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ''பிறந்த நாள் வாழ்த்துகள் அச்சன் குரியன். நீங்கள் சிரிப்பது, சாப்பிடுவதை பார்ப்பது, நீங்கள் எங்களை பார்ப்பது மகிழ்ச்சி.

உங்களின் இருப்பு நம் வாழ்க்கையை அழகாக்குகிறது. கடவுள் உங்களுக்கு சக்தியையும், பலத்தையும் அளிக்கட்டும். என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனின் பதிவிற்கு சமந்தா, அமலா பால் உள்ளிட்ட பிரபலங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

SCROLL FOR NEXT