செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய மம்மூட்டி: வைரலாகும் விடியோ

நடிகர் மம்மூட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது ரசிகையின் ஆசைக்கிணங்க அவரை சந்தித்து பேசியுள்ளார்.

DIN

கேரளாவை சேர்ந்த சிறுமி ஒருவர் அரிய வகை மறதி நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சமீபத்தில் அவரது பிறந்த நாளின் போது நடிகர் மம்மூட்டியைக் காண வேண்டும் என்ற தனது ஆசையைத் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நடிகர் மம்மூட்டி எதேச்சையாக வந்துள்ளார். அவரிடம், மருத்துவர்கள் சிறுமியின் ஆசையை தெரிவித்துள்ளனர். உடனடியாக சிறுமியை சந்தித்து பேசியுள்ளார். இதனால் சிறுமி அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளார். 

இந்த விடியோவை மம்மூட்டி ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர். 

அமல் நீரட் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள 'பீஸ்ம பர்வம்' திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT