செய்திகள்

விஜயகாந்த் நடிப்பதை உறுதிசெய்த இயக்குநர்: உற்சாகத்தில் ரசிகர்கள்

விஜயகாந்த் நடிப்பதை இயக்குநர் விஜய் மில்டன் உறுதி செய்தார். 

DIN

நடிகர் விஜய்யின் 'பிரியமுடன்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் விஜய் மில்டன். பின்னர் 'தோஸ்த்', 'நெஞ்சினிலே', 'சாமுராய்' 'ஆட்டோகிராஃப்', 'காதல்' உள்ளிட்ட பல படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார். 

'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', 'கோலி சோடா', 'கடுகு', '10 எண்றதுக்குள்ள' போன்ற சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை இயக்கிவருகிறார். 

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜயகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்தத் தகவலை பிரேமலதா விஜயகாந்த் மறுத்திருந்தார். 

இந்த நிலையில் விஜய் மில்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜயகாந்த் இருப்பதாகவும், அவரது வேடம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடனடியாக தனுஷுடன் இணையும் எச். வினோத்!

பிக் பாஸ் ஒரு போதிமரம்: இயக்குநர் பிரவீன் காந்தி கருத்து

ஜஆர்சிடிசி வழக்கு: லாலு, தேஜஸ்விக்கு சிக்கல்!

தங்கம் மேலும் ரூ. 440 உயர்ந்தது! வெள்ளி ரூ. 197 ஆக உயர்வு!

வெளிச்சப் பூவே... சாரா அலி கான்!

SCROLL FOR NEXT