செய்திகள்

தளபதி 66-ல் இணைந்து நடிக்கும் விஜய் - சரத்குமார்: ராதிகா சொன்ன சுவாரசியத் தகவல்

தளபதி 66 படத்தில் நடிகர் விஜய் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இயக்குநர் வம்சி ஏற்கனவே கார்த்தி - நாகர்ஜுனா இணைந்து தோழா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர். 

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு பேட்டியில் விஜய் - வம்சி படம் பூவே உனக்காக படத்தைப் போல குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படமாக இருக்கும் என்று தெரிவித்தார். 

தளபதி 66 படத்தின் பூஜை இன்று (ஏப்ரல் 6) நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், இசையமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் சரத்குமார் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, தளபதி 66 படத்தில்  நடிகர் விஜய்யுடன் இணைந்து சரத்குமார் நடிப்பது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: திருநெல்வேலி - செங்கல்பட்டு சிறப்பு ரயில்

ஜியோ பாரத்தின் தீபாவளி சிறப்புப் பரிசு

வன்முறை ஜனநாயகம்!

பாகிஸ்தான்-சவூதி அரேபியா திடீா் நெருக்கம் ஏன்?

மோசடிகள் பலவிதம்!

SCROLL FOR NEXT