செய்திகள்

'திரைத் தீப்பிடிக்கும்...’ பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் ஏற்க

DIN

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இந்திய அளவில் டிரெண்டானது. தற்போது இந்தப் படத்திலிருந்து 3 வது பாடலான ‘திரைத் தீப்பிடிக்கும்’ பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் பாடிய இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக தமிழகத்தில் பீஸ்ட் படத்தை வெளியிடுகிறார். இந்தப் படத்தின் டிக்கெட் முன் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பீஸ்ட் படத்துடன் கேஜிஎஃப் படமும் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி படத்துக்கு பிறகு தென்னிந்திய படங்களுக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் காரணமாக இரண்டு படங்களும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT