செய்திகள்

வெளியானது 'விருமன்' பட மதுரை வீரன் பாடல் விடியோ - எப்படி இருக்கிறது அதிதி ஷங்கர் குரல்?

யுவன் ஷங்கர் ராஜா இசையில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்திலிருந்து மதுரை வீரன் பாடல் வெளியானது. 

DIN

யுவன் ஷங்கர் ராஜா இசையில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்திலிருந்து மதுரை வீரன் பாடல் வெளியானது. 

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். கொம்பன் படத்துக்கு பிறகு கார்த்தி மற்றும் இயக்குநர் முத்தையா இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கனவே கஞ்சா பூ கண்ணால பாடல் வெளியாகி வைரலான நிலையில் தற்போது மதுரை வீரன் என்ற பாடலின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. 

இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அதிதி ஷங்கர் பாடியுள்ள நிலையில் இயக்குநர் ராஜு முருகன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். 

விருமன் பட டிரெய்லர் நாளை (ஆகஸ்ட் 3) மதுரை ராஜா முத்தையா அரங்கத்தில் வைத்து வெளியாகவிருக்கிறது. இந்த நிகழ்வில் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT