செய்திகள்

பாஜகவைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மீது சினேகன் பரபரப்பு புகார்

பாஜகவைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மீது பாடலாசிரியர் சினேகன் மோசடி புகார் அளித்துள்ளார். 

DIN

பாஜகவைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மீது பாடலாசிரியர் சினேகன் மோசடி புகார் அளித்துள்ளார். 

பாஜகவைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி ஏராளமான தொடர்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் அறியப்படுபவராக இருக்கிறார். 

இவர் மீது பாடலாசிரியர் சினேகன் காவல்துறையினரிடம் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சினேகன் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். என் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி ஜெயலட்சுமி பணம் வசூலித்து வந்துள்ளார். 

இதுகுறித்து எனக்கு தெரியவந்தவுடன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் சரியான முகவரி இல்லை என்பதால் நோட்டீஸ் திரும்பி வந்துவிட்டது. 

இதனையடுத்து அவரை கைப்பேசியில் தொடர்புகொண்டபோது நேரில் பேசிக்கொள்ளலாம் என்றார். ஆனால் அதற்கு விருப்பமில்லாததால் சட்டப்படி புகார் அளித்துள்ளேன் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT