செய்திகள்

'மோடிஜீக்கு ஜே’ என்றாலே விருது நிச்சயம்: பார்த்திபன்

DIN

பிரதமர் மோடிக்கு கோஷமிட்டால் விருது கண்டிப்பாகக் கிடைக்கும் என இயக்குநர், நடிகர் பார்த்திபன் மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார்.

அமீர்கான் நடிப்பில் வெளியாக உள்ள ‘லால்சிங் சத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியைக் கண்ட இயக்குநர், நடிகர் பார்த்திபன் அமீர்கானை பாராட்டியதுடன்   ‘பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், ”மோடிஜீக்கு ஜே”எனக் கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது’ என மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்தான டிவிட்டர் பதிவில்,  ‘லால்சிங் சத்தா பார்த்து கண் கலங்க அமீர் கானிடம் சொன்னேன், “ U r just spreading LOVE through this film to a society where there’s is hatred and negativity” Amazing movie. அன்பை, அர்ப்பணிப்பை, காதலை, கடமையை, கண்ணியத்தை இதை விட சிறப்பாக ஒரு படத்தில் சொல்ல முடியுமா? வெறுப்பை பருப்பாய் கடைந்து,அதில் அருவருப்பையும் அவமதிப்பையும் தாளித்துக் கொட்டி Dal Makhani செய்யும் சிலர் நிறைந்த இந்நாட்டிற்கு இப்படம் அவசியம்.தூர்தர்ஷனிலிருந்து சுதந்திர தினத்திற்கு பிரதமரின் கோரிக்கைப் பற்றி ஒரு வீடியோ அனுப்புங்கள் என கேட்க,நான் அனுப்ப தேசிய விருதுக்கா?” என்ன ஒரு கலை மதிப்பு? பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், ”மோடிஜீக்கு ஜே”என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது’ எனத் தெரிவித்துள்ளார்.

எப்போதும்போல் வித்தியாசமாக எழுதும் பார்த்திபனின் இந்த வார்த்தைகளில் ’மோடியைக் கிண்டல் செய்கிறாரா இல்லை ஆதரவளிக்கிறாரா’ என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

இருப்பினும், பார்த்திபன் தமிழக பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனை அழைத்து  ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை  திரையிட்டதும் பலர் இணையத்தில் ‘தேசிய விருதுக்காக பார்த்திபன் இதைச் செய்கிறார்’ என விமர்சனம் செய்ததற்கு பதிலடியாக இப்பதிவு இருக்கலாம்(மோ?) ...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT