முகப்பு
செய்திகள்

விரைவில் தெலுங்கில் நடிகர் விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தெலுங்கு தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

Updated On : 20 ஆகஸ்ட், 2022 at 3:38 PM
பகிர்:

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தெலுங்கு தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நடிகர் விஜய்யின் திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. நடிகர் விஜய்யின் ரசிகர்களைக் கூட இந்தப் படம் கவரவில்லை. 

இந்த நிலையில் இந்தப் படம் தெலுங்கில் விரைவில் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதற்கான அறிவிப்பை ப்ரமோவுடன் ஜெமினி டிவி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. 

Advertisement

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் தெலுங்கிலும் உருவாகி வருகிறது. தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஸ்ரீகாந்த் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.