சந்தானத்தின் புதிய படம் குறித்த அப்டேட்
நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் வெளியாகின. ஏஜெண்ட் கண்ணாயிரம், குளு குளு ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜின் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கிறார் சந்தானம். பார்ச்சூன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 15வது படம் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.
தாராள பிரபு படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா ஹோப் இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறார். பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் பெங்களூரில் நடைபெற்றது. மேலும் சென்னை, பாங்காங், லண்டன் எனப் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இசை - அர்ஜுன் ஜன்யா.
தற்போது இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் ஆக.31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என அதிகாரப்பூரவ தகவல் வெளியாகியுள்ளது.
Related Article
ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படத்தின் அப்டேட்
ஆலியா பட்டை கடுமையாக விமர்சிக்கும் ஹிந்தி ரசிகர்கள் - அப்படி என்ன சொன்னார் ?
சட்ட ரீதியாக சந்திப்போம் - இயக்குநர் லிங்குசாமி விளக்கம்
பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
'' மறக்க முடியாத படமா இருக்கணும்'' - நெல்சனுக்கு பிரபல இயக்குநர் வாழ்த்து