செய்திகள்

இணையத்தில் கசிந்தது நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்பட பாடல் காட்சிகள் 

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் பாடல் காட்சிகள் இணையத்தில் வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

DIN

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் பாடல் காட்சிகள் இணையத்தில் வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

'வாரிசு' படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, ஸ்ரீகாந்த், சரத்குமார், குஷ்பு, சங்கீதா, பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார். குடும்ப சென்டிமென்ட் நிறைந்த படமாக வாரிசு படம் உருவாகி வருகிறது. 

விஜய்யின் 'வாரிசு' படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி தயாரிப்பு தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் பாடல் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏற்கெனவே இந்த மாதத்தில் மட்டும் 3 முறை வாரிசு படப்பிடிப்புத் தள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதாக கூறப்பட்டு வந்தநிலையில் படக்குழுவினருக்கு தயாரிப்பு தரப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT