முகப்பு
செய்திகள்

எப்படி இருக்கிறது 'விக்ரம் வேதா' ஹிந்தி டீசர்?

ஹிருத்திக் ரோஷன் மற்றும் சயீப் அலிகான் இணைந்து நடித்த விக்ரம் வேதா பட ஹிந்தி டீசர் வெளியானது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

ஹிருத்திக் ரோஷன் மற்றும் சயீப் அலிகான் இணைந்து நடித்த விக்ரம் வேதா பட ஹிந்தி டீசர் வெளியானது. 

புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு கத சொல்லட்டா சார் என விஜய் சேதுபதி பேசும் வசனம் மிக பிரபலம். 

தற்போது இந்தப் படத்தின் ஹிந்தி பதிப்பு உருவாகியுள்ளது. தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்கியுள்ளனர். இதில் விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் வேடத்தில் சயீப் அலிகானும் நடித்துள்ளனர். 

மேலும் ராதிகா ஆப்தே தமிழில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை வைத்துப் பார்க்கும்போது அப்படியே தமிழ் படத்திலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் உருவாகியுள்ளது தெரிகிறது. சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை கூட அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.