செய்திகள்

அதிமுகவில் இணைந்தார் இயக்குநர் கே.பாக்யராஜ்

அதிமுகவில் முறையாக இணைந்து செயல்படப் போவதாக இயக்குநர் கே.பாக்யராஜ் அறிவித்துள்ளார்.

DIN

அதிமுகவில் முறையாக இணைந்து செயல்படப் போவதாக இயக்குநர் கே.பாக்யராஜ் அறிவித்துள்ளார்.

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இன்று சென்னையில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து தன் ஆதரவைத் தெரிவித்தார்.

சந்திப்பிற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், ‘அதிமுகவில் நான் இணைந்து செயலாற்ற உள்ளேன். எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது கட்சி எப்படியிருந்ததோ அப்படி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே என் ஆசை. எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கட்சியைப் பலப்படுத்துவது குறித்து ஆலோசிப்பேன். எம்.ஜி.ஆரின் பெயரைக் காப்பாற்றவும் அதிமுகவை ஒருங்கிணைக்கவும் என்னால் முடிந்தவற்றை செய்துகொண்டே இருப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT