மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிக்கத் தயார் என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக தகவல் பரவியது. இந்தத் தகவல் ரசிகர்களிடைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கூடவே தற்போது ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் சந்தானம் மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் கேப்டன் பட விழாவில் பேசிய சந்தானம், ஆர்யா எனக்கு ஒரு நல்ல நண்பர். என்னிடம் இரண்டு நாயகர்கள் படங்களில் நடிக்கவும், சிறப்பு வேடத்தில் நடிக்கவும் என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். ஆனால் நான் நடிக்கவில்லை.
இப்பொழுது சொல்கிறேன். ஆர்யா, 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' படம் எடுத்தால் அதில் நான் நடிப்பேன். நான் நகைச்சுவை நடிகனாக நடித்துக்கொண்டிருக்கும்போது ஆர்யா என்னை உடற்பயிற்சி செய்ய வற்புறுத்துவார். அவர் பணம் போட்டு இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். எல்லோரும் கண்டிப்பாக கேப்டன் படத்தைப் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.