செய்திகள்

’கட்டா குஸ்தி’ வசூல் எவ்வளவு?

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ராட்சசன், எஃப்ஐஆர் திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும்,  நடிகர்கள் காளி வெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, குஸ்தி தெரிந்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில், கட்டா குஸ்தி திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ.35 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷால் தயாரிப்பில் மீண்டும் அவருக்கு ஒரு வெற்றிப்படம் கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்தியில் கூட்டணியில் இருந்தபோது மாநில சுயாட்சி ஸ்டாலினுக்கு தெரியவில்லையா? தமிழிசை கேள்வி

வாசுதேவநல்லூா் அருகே யானைகள் அட்டகாசம்: தென்னை மரங்கள் சேதம்

வடுகப்பட்டி தைலா வன்னியா் கோயிலில் கிடாவெட்டு பூஜை!

கறிக்கோழி வளா்ப்போா் போராட்டம்: 35 போ் கைது

ராஜஸ்தானில் 8 நீதிபதிகள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்- உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி

SCROLL FOR NEXT