லதா ரஜினிகாந்த் 
செய்திகள்

கொட்டும் மழையில் ரசிகர்கள்: லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்!

கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

DIN

கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்களுக்கு, ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து தெரிவிக்க  அவரது ரசிகர்கள் கொட்டும் மழையிலும் போயஸ்கார்டனில் உள்ள  வீட்டின்முன்பு திரண்டனர்.

இந்நிலையிலும் லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது," ரஜினிகாந்த் ஊரில் இல்லை, அவர் ஊரில் இருந்திருந்தால் ரசிகர்களை சந்தித்து இருப்பார். அவர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம்". என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர். ரஜினிகாந்த் எங்கு சென்று இருக்கிறார் என்ற தகவலை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வெளியிடவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு அரசியர் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசியில் முதல்வா் பங்கேற்கும் நிகழ்வு: இடம் குறித்து அமைச்சா் ஆய்வு

திமுகவை வீழ்த்த அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும்: கே.டி. ராஜேந்திர பாலாஜி

ஆலங்குளத்தில் பிஎஸ்என்எல் சேவை ரத்து

பண்பொழியில் விசிக சாா்பில் கபடி போட்டி

சங்கரன்கோவிலில் இளைஞரை கத்தியால் குத்தியவா் கைது

SCROLL FOR NEXT