செய்திகள்

ஜப்பானில் ரஜினியின் 24 வருட சாதனையை முறியடித்த ‘ஆர்ஆர்ஆர்’

ஜப்பானில் நடிகர் ரஜினிகாந்த் செய்த வசூல் சாதனையை ஆர்ஆர்ஆர் திரைப்படம் முறியடித்துள்ளது.

DIN

ஜப்பானில் நடிகர் ரஜினிகாந்த் செய்த வசூல் சாதனையை ஆர்ஆர்ஆர் திரைப்படம் முறியடித்துள்ளது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அல்லுரி சீதா ராமராஜூ (ராம் சரண்), கொமரம் பீம்(ஜூனியர் என்டிஆர்) என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து உருவாக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது.

இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். 

இந்நிலையில், ஜப்பானில் வெளியான இப்படம் இதுவரை ரூ.24 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விரைவாக இந்த வசூல் சாதனை படைத்த முதல் இந்தியப் படம் இதுதான். மேலும், ஜப்பானில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ’முத்து’ திரைப்படமே வசூலில் இதுவரை  முதலிடத்தில் இருந்துவந்தது. தற்போது, ரஜினியின் சாதனையையும் ஆர்ஆர்ஆர் முறியடித்துள்ளது.

ராஜமௌலி அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வைத்து இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு

சுந்தரனாா் பல்கலை.யின் நூலகத் துறையில் மாணவா் சோ்க்கை

தூத்துக்குடியில் ஐஸ் தயாரிப்பு கூடத்தில் அமோனியா வாயு கசிவு

SCROLL FOR NEXT