செய்திகள்

ரஜினியும் மகளும், ஏ.ஆர்.ரஹ்மானும் மகனும்! வைரலாகும் குடும்ப செல்ஃபி

ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் தங்களது வாரிசுகளுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN


ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தங்களது வாரிசுகளுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் 'லால் சலாம்' திரைப்படம் உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில், பிரமாண்ட படைப்பாக உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைமைக்கிறார். 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் படத்திற்கு பாடல்கள் அமைக்கும்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறார். 

இதனிடையே ரஜினியும் அவரது மகள் ஐஸ்வர்யாவும் திருமலையில் நேற்று சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ரேணிகுண்டா சென்று, அங்கிருந்து விமானம் மூலம் கடப்பா சென்றனர்.

அவர்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் கடப்பாவுக்குச் சென்றார். அங்கு ரஜினிகாந்துடன் அமீன்பீர் தர்காவிற்குச் சென்று ஏ.ஆர். ரஹ்மான் வழிபாடு செய்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், அவரின் மகன் ஏ.ஆர். அமீன் ஆகிய நான்கு பேரும் ஒன்றாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

போப் பதினான்காம் லியோவுடன் இஸ்ரேல் அதிபர் சந்திப்பு!

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ்!

SCROLL FOR NEXT