முகப்பு
செய்திகள்

நயன்தாரா படத்திற்காக பிரபல பாடகரும், அவர் மகளும் பாடிய பாடல்! 

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்திற்காக உத்தாரா உன்னிகிருஷ்ணன் பாடிய பாடல் வெளியாகியுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:51 PM
பகிர்:

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்திற்காக உத்தாரா உன்னிகிருஷ்ணன் பாடிய பாடல் வெளியாகியுள்ளது. 

மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கி வரும் படம் - கனெக்ட். 

ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கதிர்மொழி சுதா எழுதியுள்ள உன்னிகிருஷ்ணண் மற்றும் அவரது மகள் உத்தாரா உன்னிகிருஷ்ணன் இணைந்து பாடியுள்ள ‘நான் வரைகிற வானம்’ எனும் பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

சைவம் படத்தில் பாடகியாக அறிமுகமான உத்தாரா தெறி படத்தில் பாடிய பாடல் மிகவும் புகழ்பெற்றது. தற்போது மீண்டும் பாடியுள்ள இந்தப் பாடல் ஹிட் அடிக்குமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments