செய்திகள்

தங்கலான் படத்திற்காக கடுமையாக பயிற்சி செய்யும் மாளவிகா? 

நடிகை மாளவிகா மோகனன் சிலம்பம் சுற்றும் விடியோ வைரலாகி வருகிறது. 

DIN

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தின் தலைப்பு அறிமுக விடியோ அக்டோபர் 23இல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு தங்கலான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை இந்தப் படம் பேசுவதாக கூறப்படுகிறது. டீசரிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெறும் கதை என டீசர் மூலம் நமக்கு தெரிய வருகிறது. 

சமீபத்தில் தங்கலான் படத்தில் மாளவிகா சரியாக நடிக்கவில்லை என வதந்தி வெளியானது. பின்னர் மாளவிகா சிலம்பம் பயிற்சி எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது கடலோரத்தில் பாறையின் மீதிருந்து சிலம்பம் சுற்றும் விடியோவை வெளியிட்டுள்ளார். 

மிகவும் பொறுமையுடன் பயிற்சி தந்த தனது பயிற்சியாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியாளர் பா. ரஞ்சித்துடன் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். எனவே இதனால் மாளவிகா இந்த பயிற்சி எடுப்பது தங்கலான் படத்திற்காக இருக்குமென யூகிக்க முடிகிறது. 

இந்த விடியோவிற்கு “வேற லெவல்” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘ஏா்போா்ட்’ மூா்த்தி மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து

இளைஞரிடம் பணம் பறித்த 5 சிறுவா்களுக்கு நூதன தண்டனை

ராணுவ வீரா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

இந்தியா-சிலி விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

பெண்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி : அமைச்சா் கே.என்.நேரு

SCROLL FOR NEXT