செய்திகள்

ரஜினியின் அடுத்த படம் ஜெய் பீம் இயக்குநருடனா? அப்போ பிரதீப் ரங்கநாதன்?

ஜெய் பீம் திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஜெய் பீம் திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல் அவரிடம் கதை சொல்லியிருப்பதாகப் பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.

அண்ணாத்தை படத்தைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதையடுத்து, லைகா தயாரிப்பில் 2 படங்களில் நடிப்பதற்கு ரஜினி ஒப்பந்தமானதாகத் தகவல்கள் வெளியாகின. 

முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, லைகா தயாரிக்கும் ரஜினியின் 171-வது படத்தை டான் திரைப்படத்தின் இயக்குநர் சிபி. சக்ரவர்த்தி இயக்குவதாகத் தகவல்கள் கசிந்தன. பிறகு, சம்பளம் மற்றும் கதை என பல்வேறு காரணங்களினால் சிபி சக்ரவர்த்தி இதிலிருந்து விலகிவிட்டதாகப் பேசப்பட்டன. 

பின்னர், ‘கோமாளி’, ‘லவ் டுடே’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தை இயக்கப்போவதாகக் கூறப்பட்டது.

இத்தனை தகவல்களுக்கு மத்தியில், ஜெய் பீம் திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல், ரஜினியிடம் கதை சொல்லியிருப்பதாக தினமணி இணையதளத்துக்கு நம்பத்தகுந்த நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

இந்தக் கதை லைகாவுடன் ஒப்பந்தமாகியுள்ள படத்துக்காகவா அல்லது அதற்கு அடுத்த படத்துக்கான கதையா என்பது பற்றி உறுதிபடத் தெரியவில்லை. வரும் காலங்களில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

மன அழுத்தமா? மரபணுவும் ஒரு காரணம்! மன நலனுக்கு என்ன செய்வது?

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

SCROLL FOR NEXT