செய்திகள்

வாரிசு இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு கிடையாது: எங்கு பார்க்க முடியும்? 

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது. 

DIN

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் ரஞ்சிதமே 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களையும், இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ 26 மில்லியன் (2.6 கோடி) பார்வையாளர்களையும் யூடியூபில் சமீபத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  3வது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது. 

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 24) மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் விலைகள் அதிக அளவுக்கு விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் சர்சையானது. 

விஜய்யின் பேச்சுக்கு ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்கள் இந்த இசை வெளியீட்டு விழாவை பார்க்க வேண்டுமானால் காத்திருக்க வேண்டும். நேரடி ஒளிபரப்பு செய்யாமல் சன் டிவி நிறுவனம் இதன் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியுள்ளது. புத்தாண்டையொட்டி ஜனவரி 1ஆம் நாள் இந்த விடியோவை சன் டிவி வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் கோப்பை: வாலிபாலில் சென்னைக்கு தங்கம்

லக்மே ஃபேஷன் வீக் 2025

விவசாயக் கடன்களை உரிய காலத்தில் செலுத்தினால் வட்டியை அரசே ஏற்கும்: திருவண்ணாமலை ஆட்சியா் தகவல்

இன்று ஸ்ரீ கோடி தாத்தா சாமி குரு பூஜை

தேனிலவுக்கு ஏற்பாடு செய்துவிட்டு தெரிவியுங்கள்: திரிஷா

SCROLL FOR NEXT