செய்திகள்

‘மெழுகு டாலு நீ’- த்ரிஷாவின் புதிய விடியோவிற்கு ரசிகர்கள் பாராட்டு!

ராங்கி படத்தின் ப்ரமோஷனுக்காக த்ரிஷா புதிய விடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். 

DIN

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ராங்கி. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். 

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர், முருகதாஸ் கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசை சி.சத்யா. ஒளிப்பதிவு சக்திவேல். பாடல்கள் கபிலன் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் கடந்த 2019இல் வெளியான நிலையில் 3 வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பட வெளியீட்டிற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

இந்நிலையில், ப்ரோமஷனுக்காக புதிய விடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. இதற்கு ரசிகர்கள், “மெழுகு டாலு நீ”, “வயசானாலும் அழகு குறையவில்லை” என கருத்து தெரிவித்து வருகின்றனர். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ரஞ்சிதமே பாடலின் நடன அசைவுகள் போல முத்தமிட்டார். இதன் படங்களை வைத்து எடிட் செய்து த்ரிஷாவின் அழகிற்கு மீம்ஸாக கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர். 

தளபதி 67 படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.  இந்நிலையில் ஒரு நேர்காணலில் வாரிசு படத்திற்கு த்ரிஷா வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT