செய்திகள்

‘கட்டா குஸ்தி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

DIN

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, குஸ்தி தெரிந்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில், கட்டா குஸ்தி திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ.35 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷால் தயாரிப்பில் மீண்டும் அவருக்கு ஒரு வெற்றிப்படம் கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். 

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜனவரி 1ஆம் நாள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராட்சசன், எஃப்ஐஆர் திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும்,  நடிகர்கள் காளி வெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT