செய்திகள்

’விஜய் 67’ இப்படித்தான் இருக்கும்: லோகேஷ் கனகராஜ்

விஜய் 67 திரைப்படத்தின் மேக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

விஜய் 67 திரைப்படத்தின் மேக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு  திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 67வது படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் டிச.5 ஆம் தேதி நடைபெற்றது.

மேலும், விஜய் 67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரம் துவங்க உள்ளது.

இந்நிலையில், இப்படம் முழுக்க முழுக்க தன்னுடைய படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படம் பாதி இயக்குநர் படமாகவும் பாதி விஜய் படமாகவும் உருவானது. 

முன்னதாக, இப்படத்தில் நடிகர் விஜய் 50 வயது கதாபாத்திர தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றும் எதிர்பாராத சமயத்தில் குடும்ப தலைவன் எப்படி ஒரு கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருட்டு வழக்கில் தொடா்புடைய 4 போ் கைது

தருமபுரி புதிய பேருந்து நிலையம் பிப்ரவரி 5இல் திறப்பு?

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக ஆா்ப்பாட்டம்

கஞ்சா விற்றவா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

ம.சு.பல்கலைக்கழகக் கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT