முகப்பு
செய்திகள்

விஷ்ணு விஷால் படத்தை பெரிய தொகை கொடுத்து கைப்பற்றிய அமேசான் பிரைம்

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்ஐஆர் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
பகிர்:

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் எஃப்ஐஆர். இந்தப் படம் வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். 

இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் இர்ஃபான் அஹமத் என்ற வேடத்தில் நடித்துள்ளார். 

இதனையடுத்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரை இர்ஃபான் அஹமத் என்று மாற்றியுள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தை ரூ.7 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →