''பணத்துக்காக போலி நிகழ்ச்சியில்...'' : பிக்பாஸ் அல்டிமேட்டை சாடிய பிரபல நடிகை
பணத்துக்காக போலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேரமில்லை என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸில் ஏற்கனவே கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் காணலாம். இந்தப் போட்டியில் வனிதா, சினேகன், பாலாஜி முருகதாஸ், அபிராமி, ஜுலி, நிரூப், அபிநய், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | 'டைகர்' படத்துக்காக விக்ரம் பிரபுவுடன் மீண்டும் இணையும் இயக்குநர் முத்தையா
Advertisement
Advertisement
நடிகை கஸ்தூரி கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் நீங்கள் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த கஸ்தூரி, எனக்கு குடும்பம் இருக்கிறது. செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கிறது. பணத்துக்காக போலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவசியம் இல்லை. என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.