செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு கரோனா: மருத்துவமனையில் அனுமதி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

DIN

ஐஸ்வர்யா கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில் தெரிவித்துள்ளதாவது, ''எல்லா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டும் எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள். மறக்காமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். 2022 ஆம் ஆண்டே, எனக்காக இன்னும் என்னவெல்லாம் சேமித்து வைத்திருக்கிறாயோ'' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். 

சில வாரங்களுக்கு முன்னர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரியவிருப்பதாக அறிவித்தனர். இது இருவரது ரசிகர்களை சோகத்தை ஏற்படுத்தியது. 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தற்போது தனிப் பாடல் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT