செய்திகள்

தங்கக் கடத்தல் வழக்கில் வசமாக சிக்கிய பிக்பாஸ் அக்சரா? அமலாக்கத் துறை விசாரணையால் பரபரப்பு

தங்கக் கடத்தல் வழக்கில் அமலாக்கத் துறையினர் பிக்பாஸ் அக்சராவிடம் விசாரணை மேற்கொண்டனர். 

DIN

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்சரா ரெட்டி, ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் 84 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் தாக்குபிடித்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்துகொண்ட வருணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் அக்ஷரா நடிக்கவிருக்கிறார். 

இந்த நிலையில் அக்சரா தங்கக் கடத்தல் வழக்கில் கோழிக்கோட்டில் அமலாக்கத்துறையினரால் நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு உடப்படுத்தப்பட்டார்.

கடந்த 2013 ஆம் கொச்சின் விமான நிலையத்தில் ஆண்டு இரண்டு புர்கா அணிந்த பெண்கள் 20 கிலோகிராம் தங்கம் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஃபைஸ் என்பவர் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். 

இந்த வழக்கில் அக்சரா ரெட்டிக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. முன்னதாக ஃபைஸிடம் நடைபெற்ற விசாரணையில் அவருக்கு திரைத்துறையினருக்கு சம்பந்தம் உள்ளதாக தெரியவந்திருக்கிறது.

அக்சரா ரெட்டியின் உண்மையான பெயர் ஸ்ராவ்யா சுதாகர் என்றும் தங்கக் கடத்தல் வழக்கில் மாட்டிக்கொண்டதால் தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டதாகவும், அவர் பிக்பாஸில் கலந்துகொண்டபோது தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி

கலைஞர் ஒளியில் வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

SCROLL FOR NEXT