சந்திரலேகா சீரியலில் நடித்து வருபவர் அருண் ராஜன். கிட்டத்தட்ட 8 வருடங்களாக ஒளிபரப்பாகும் அந்த தொடரில் அருண் ராஜனும் துவக்கத்திலிருந்தே சபரி வேடத்தில் நடித்து வருகிறார்.
தற்போதைய சின்னத்திரை தொடர்களில் அடிக்கடி இவருக்கு பதில் இவர் என நடிகர்களை மாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒரே தொடரில் 8 வருடங்கள் நடிப்பது என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிக்க | 'மகான்' பார்த்துவிட்டு கார்த்திக் சுப்புராஜுக்கு போன் செய்த ரஜினிகாந்த்: என்ன சொன்னார் தெரியுமா?
இந்த நிலையில் அருண் ராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மேடு பள்ளமாக இருக்கும் சாலையை அவரே சமன் செய்கிறார். இதுகுறித்து அவரது பதிவில், ''பார்த்துவிட்டு கடந்துபோக மனது வரவில்லை. நம்முடைய கடமை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.