முகப்பு
செய்திகள்

விஜய்யின் 'பீஸ்ட்' அப்டேட்: காதலர் தினத்தில் வெளியாகிறது முழுப்பாடல்

காதலர் தினத்தையொட்டி பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் நாளை வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:


காதலர் தினத்தையொட்டி பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் நாளை வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் அரபிக் குத்து பாடலுக்கான புரோமோ வெளியான நிலையில், நாளை (பிப்.14) அந்த பாடல் முழுவதும் வெளியாகவுள்ளது.

அரபிக் பாணியில் குத்து வகையை சேர்ந்த பாடலாக அரபிக் குத்து பாடல் உருவாகியுள்ளது. இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் சிவகார்த்திகேயன் ஆகியோர் இடம் பெற்றிருந்த அரபிக் குத்து பாடலுக்கான புரோமோ மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் பாடலின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இருவரும் இடம்பெறும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக இருவரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடுவதைப் போன்ற போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் நண்பன் திரைப்படத்தில் பெல்லி நடனத்தில் இடம்பெற்ற இலியானா பாடலையே நினைவுபடுத்துகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →