செய்திகள்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' டீசர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட டீசர் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.  

DIN

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டீசர் வருகிற 18 ஆம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, நடிகர் வினய் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ரத்னவேலு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் வருகிற மார்ச் 10 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல் ஈடி என்ற பெயரில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. ஜெய் பீம் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் நடிகராக சூர்யா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய எண்ணெய் இறக்குமதி தொடர்ந்தால் வரி தளர்வு இல்லை! -இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இந்தியா - தெ.ஆ. டெஸ்ட்: ரூ.60-இல் தொடங்கும் டிக்கெட் விலை!

நாளை உருவாகிறது புயல் சின்னம்! சென்னை, புறநகர்ப் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தீபாவளிப் பண்டிகையில் அனைவரது மனதிலுமுள்ள இருள் அகலட்டும்; ஒளி பரவட்டும்! -இலங்கை அதிபர்

ஹேப்பி தீபாவளி... பூமி பெட்னகர்!

SCROLL FOR NEXT