செய்திகள்

இந்தோனேசிய மொழியில் ரீமேக்காகும் முதல் தமிழ் படம்

இந்தோனேஷிய மொழியில் ரீமேக்காகும் என்ற பெருமையைப் பெற்ற முதல் தமிழ் படம் 

DIN

பார்த்திபன் இயக்கி நடித்திருந்த ஒத்த செருப்பு திரைப்படம் கடந்த 2019 வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த ஆண்டுக்கான தேசிய விருதையும் அந்தப் படம் பெற்றது. 

இந்தப் படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். அவரது வித்தியாச முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்தது. இந்தப் படத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சன் நடிப்பில் பார்த்திபன் மறு உருவாக்கம் செய்து வருகிறார். அமிதாப் பச்சன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். 

இந்த நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனிசியாவின் பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இதன் மூலம் இந்தோனேசியாவில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை ஒத்த செருப்பு பெற்றுள்ளது. இதனை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை சமன்செய்த முகமது சிராஜ்!

உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

SCROLL FOR NEXT