இந்தோனேசிய மொழியில் ரீமேக்காகும் ’ஒத்த செருப்பு’ 
செய்திகள்

இந்தோனேசிய மொழியில் ரீமேக்காகும் ’ஒத்த செருப்பு’

நடிகர் பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனேசிய மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

DIN

நடிகர் பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனேசிய மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. 

ஒத்த செருப்பு திரைப்படம் முழுக்க ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே தோன்றும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு, பார்த்திபன் நடித்த அவரே இயக்கியிருந்தார். இதுவரை மேற்கொள்ளப்படாது புதிய முயற்சி என்று படம் வெளிவந்த போது பலரின் பாராட்டுகளையும் பெற்ற படமாக ஒத்த செருப்பு விளங்கியது.

விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ஒத்த செருப்பு திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளையும், மத்திய அரசின் தேசிய விருதையும் வென்றது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் இந்தோனேசியாவின் பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்ப்படம் இதுவாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை சமன்செய்த முகமது சிராஜ்!

உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

SCROLL FOR NEXT