முகப்பு
செய்திகள்

குடித்துவிட்டு காவல்துறையினருடன் ரகளையில் ஈடுபட்ட தமிழ் பட நடிகை கைது

மது அருந்திவிட்டு காவல்துறையினருடன் ரகளையில் ஈடுபட்ட தமிழ் பட நடிகை கைது செய்யப்பட்டார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

இயக்குநர் சரண் இயக்கத்தில் பிக்பாஸ் ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நாயகியாக நடித்தவர் காவ்யா தாபர். இவர் கடந்த வியாழக்கிழமை மும்பையில் இரவு விருந்து நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு ஆண் நண்பர்களுடன் தனது காரில் வந்துள்ளார்.

அப்போது சாலையில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது அவரது கார் மோதியது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் காவ்யா தாபரை விசாரித்தபோது அவர் மது அருந்தியது தெரியவந்தது.

இதன் பிறகு அவரை கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது அவர்களுடன் காவ்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பெண் காவலரின் சீறுடையை பிடித்து இழுத்து பிரச்னை செய்துள்ளார். 

இதனையடுத்து அவரை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறையினர் அந்தேரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.