செய்திகள்

பீஸ்ட் அரபிக் குத்து பாட்டுக்கு மனைவியுடன் இயக்குநர் அட்லி நடனம்: செமையா ஆடுறாரே

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு தனது மனைவியுடன் இயக்குநர் அட்லி நடனம் ஆடும் விடியோ வைரலாகி வருகிறது. 

DIN

நடிகர் விஜய்யின் படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலுக்கு சமந்தா உள்ளிட்ட பிரபலங்கள் நடனம் ஆடி விடியோ பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் இயக்குநர் அட்லியும் அவரது மனைவி பிரியா, கலை இயக்குநர் முத்துராஜ் உள்ளிட்டோருடன் பீஸ்ட் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த விடியோவை அட்லி மற்றும் ப்ரியா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

இந்த விடியோவில் அட்லி நன்றாக நடனமாடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது அட்லி ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு பிறகு 4வது முறையாக நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லி இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT