செய்திகள்

பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மரணம்: பிரபலங்கள் இரங்கல்

பிரபல பாடலாசிரியர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

DIN

பிரேம்ஜியின் இசையில் ஜெய் நடித்த அதே நேரம் அதே இடம் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் லிலித் ஆனந்த். இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் ரசிகர்களின் மத்தியில் கவனம் பெற்றார். 

தொடர்ந்து மாநகரம், வடகறி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, அஞ்சல, காஷ்மோரா, ஜுங்கா போன்ற படங்களில் பாடல் எழுதியுள்ளார். குறிப்பாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இடம்பெற்ற என் வீட்டுல பாடல் பெரிய வெற்றி பெற்றது. 

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லிலிதா ஆனந்த் மருத்துவனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) உயிரிழந்தார். அவருக்கு வயது 47.

அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT