செய்திகள்

''நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு....'' : மகிழ்ச்சியுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த தகவல்

பாடல் விடியோவை படமாக்கி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதுகுறித்து தகவல் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

DIN

தனுஷுடனான பிரிவு அறிவிப்புக்கு பிறகு ஐஸ்வர்யா தற்போது தனிப் பாடல் ஒன்றை இயக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார். ஃபே பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் பாடலை தயாரிக்கிறது. 

அங்கித் திவாரி இந்தப் பாடலுக்கு இசையமைக்கிறார். தற்போது இந்திய அளவில் பிரபல நடன இயக்குநராக இருக்கும் ஜானி இந்தப் பாடலுக்கு நடனம் அமைக்கவிருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான பீஸ்ட் பட அரபிக் குத்து பாடலுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழில் இந்தப் பாடலை அனிருத் பாட, தெலுங்கில் சாகர், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த் ஆகியோர் பாடவிருக்கின்றனர். இந்தப் பாடல் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேமராவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, இந்த அழகிகளை நீண்ட வருடங்களுக்கு பிறகு கையாள்வதில் மகிழ்ச்சி. புகைப்படம் அனைத்தையும் தெரிவிக்கும். முதல் நாள் படப்பிடிப்பு முடிவடைந்தது. என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பாக 3 மற்றும் வை ராஜா வை படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

SCROLL FOR NEXT