முகப்பு
செய்திகள்

ஹிப்ஹாப் தமிழா இசையில் 'ஆலம்பனா' பாடல் வெளியானது

ஹிப்ஹாப் தமிழா இசையில் வைபவ் நடித்துள்ள ஆலம்பனா பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Updated On : 5 ஜனவரி 2022, 6:12 pm IST
பகிர்:

வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் ஆலம்பனா. பாரி கே.விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் கௌஸ்டப் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில் வைபவுக்கு ஜோடியாக பார்வதி நடிக்க, திண்டுக்கல் லியோனி, யோகி பாபு, முனிஷ் காந்த், ரோபோ சங்கர், பாண்டியராஜ், முரளி சர்மா, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் இருந்து ஓபனிங் சாங்க இது பாடல் வெளியாகியுள்ளது. கபிலன் வைரமுத்து எழுதியுள்ள இந்தப் பாடலை அஜய் கிருஷ்ணா பாடியுள்ளார். ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் கபிலன் வைரமுத்து எழுதிய ஒலியும் ஒளியும் என்ற கோமாளி பட பாடலைப் போன்று இந்தப் பாடலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.