செய்திகள்

விஜய் - இயக்குநர் வம்சி இணையும் படம்: வசனம் எழுதும் தேசிய விருது பெற்ற பட இயக்குநர்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதவிருக்கிறார். 

DIN

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. இந்த நிலையில் தெலுங்கு இயக்குநநர் வம்சியுடன் விஜய் இணையும் படம் குறித்து நாளுக்கு நாள் சுவாரசியமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தில் ராஜு, விஜய் நடித்துள்ள படம் பூவே உனக்காக போன்ற குடும்ப  கதையாக இருக்கும் எனவும், இந்தப் படத்தில் அனைத்து அம்சங்களும் இருக்கும் என்றும் தெரிவித்தார். 

இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதவுள்ளாராம். ராஜு முருகன் படங்களில் வசனங்கள் ஏற்கனவே பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ராஜு முருகன் குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.  விஜய் - இயக்குநர் வம்சி இணையும் படம் தமிழ் - தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிறந்த மண்! - மதுரை குறித்து Vijay | TVK

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

SCROLL FOR NEXT