செய்திகள்

’டான்’ திரைப்படத்துடன் மோதும் ‘ஆர்ஆர்ஆர்’

DIN

'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் இறுதியான வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இந்தப் படத்தின் வேலைகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்திற்கான விளம்பர வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் கரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீடு திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பின் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வரும் மார்ச்-25 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘டான்’ திரைப்படமும் அன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT