முகப்பு
செய்திகள்

லோகேஷ், சூர்யாவைத் தொடர்ந்து, உதயநிதிக்கும் பரிசளித்த கமல் - வெளியான புகைப்படங்கள்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படக்குழுவை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படக்குழுவை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். 

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்டிக்கள் 15. சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகளை இந்தப் படம் விமர்சித்தது. இந்தப் படத்துக்கு இந்திய அளவில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. 

வெற்றி விழா !

இந்தப் படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. போனி கபூர் தயாரித்த இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கினார் இந்தப் படம் கடந்த மே 20 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி விழாவையும் படக்குழு கொண்டாடினர். 

நேரில் பாராட்டு !

இந்த நிலையில் சமீபத்தில் நெஞ்சுக்கு நீதி படம் பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,

''நெஞ்சுக்கு நீதி படத்தைப் பார்த்து படக் குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய கமல்ஹாசனுக்கு நன்றி. விக்ரம்-ல் உடன் பங்கேற்றதாக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார் - அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.