செய்திகள்

ஹீரோவாக நடிக்கும் விஜய் டிவி ரக்‌ஷன் - முழு விவரம் இதோ

விஜய் டிவி புகழ் ரக்‌ஷன் நாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 

DIN

விஜய் டிவி புகழ் ரக்‌ஷன்நாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 

விஜய் டிவியில் தொகுப்பாளராக கலக்கிக் கொண்டிருக்கும் ரக்‌ஷன், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாம் நாயகனாக அறிமுகமாகி கலக்கினார். அந்தப் படத்தில் நடிகர் ரக்‌ஷனின் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதனையடுத்து தனி நாயகனாக பெரிய வலம் வருவார் என்ற எதிர்பார்ப்பு திரையுலகினரிடையே உருவானது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலக்கிக்கொண்டிருக்கிறார் ரக்‌ஷன். 

இந்த நிலையில் ரக்சன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இரா கோ யோகேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் வெள்ளிக்கிழமை துவங்கியது. 

இந்தப் படத்தில் கலக்கப்போவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க்ஸ்டர் ராகுல் மற்றும் பலர் நடிக்கின்றனர். உணர்வுபூர்மான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுது போக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

சச்சின் வாரியர் இசையமைக்க, தாமரை இந்தப் படத்தின் பாடல்களை எழுதுகிறார். கோபி துரைசாமி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT