செய்திகள்

மனிதர்களே இல்லாத படம் - பார்த்திபனின் அடுத்த புதிய முயற்சி

DIN

அடுத்ததாக இயக்குநர் பார்த்திபன் மனிதர்களே இல்லாமல் விலங்குகளை மட்டும் வைத்து படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கதையே இல்லாமல் படம், ஒருவர் மட்டுமே நடித்த படம், உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என தமிழ் சினிமாவில் புதிய முற்சிகளை இயக்குநர் பார்த்திபன் மேற்கொண்டுவருகிறார். 

அந்த வகையில் தற்போது அவர் இயக்கி நடித்திருக்கும் இரவின் நிழல் திரைப்படம் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. 

திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஃபிஷ் அண்ட் கேட் என்ற ஈரானிய படம் தான் உலகின் முதல் நான் லீனியர் படம் என்று பதிவிட, அதற்கு பார்த்திபன் மறுப்பு தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இயக்குநர் பார்த்திபன் அடுத்ததாக மனிதர்களே இல்லாமல் முழுக்க முழுக்க விலங்குகளை வைத்து படம் இயக்கவுள்ளாராம். இதற்காக அனிமேஷன் படங்களைப் போல அல்லாமல் உண்மையான விலங்குகளை நடிக்க வைக்க முடிவுசெய்துள்ளாராம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT