செய்திகள்

'இரவின் நிழல்' படம் பார்த்து ரஜினிகாந்த் சொன்ன கருத்து இதுதான் !

DIN

இரவின் நிழல் படம் குறித்து இயக்குநர் பார்த்திபனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். 

பார்த்திபன் எழுதி இயக்கி, தயாரித்த இரவின் நிழல் படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் ஓடும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்திபன் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். 

இந்தப் படத்தை ஒரே ஷாட்டில் மிக நேர்த்தியாக உருவாக்கிய இயக்குநர் பார்த்திபன் இசையமைப்பாளர் ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சன், கலை இயக்குநர் விஜய் முருகன் உள்ளிட்டோருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இந்த நிலையில் இரவின் நிழல் படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், பார்த்திபனை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

மேலும், இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து, அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபனுக்கும், அவரது அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், முக்கியமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இந்தப் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ஈரான் படமான பிஷ் அண்ட் கேட் தான் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பதிவிட சர்ச்சை உருவானது. இதனையடுத்து பார்த்திபன் மற்றும் ப்ளூ சட்டை மாறன் இருவரும் சமூக வலைதளங்களில் காரசாரமாக மோதிக்கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT