முகப்பு
செய்திகள்

நகைச்சுவைக் காட்சியை நடித்துக் காட்டிய வடிவேலு: படப்பிடிப்பில் சுவாரஸ்யம்

நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை நடிப்பு விடியோ வைரலாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை நடிப்பு விடியோ வைரலாகியுள்ளது.

சந்திரமுகி - 2 படத்தை இயக்குநர் பி.வாசு நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு படப்பிடிப்பு இடைவேளையின்போது ராகவா லாரன்ஸ் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முன்னிலையில் ‘சுறா’ படத்தில் தான் நடித்த காட்சி ஒன்றை நடித்துக்காட்டினார். 

தற்போது அந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் ’சந்திரமுகி - 2’ திரைப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - தோட்டா தரணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.