செய்திகள்

திரைப்படத் தேசிய விருதுகளில் முதலிடம் யாருக்கு?: தமிழை முந்தியதா மலையாளம்?

ச. ந. கண்ணன்

திரைப்படத் தேசிய விருதுகளுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது. தமிழ், மலையாளப் படங்கள் அதிக தேசிய விருதுகளை வாங்கிக் குவித்தன.

இந்நிலையில் தேசிய விருது பெற்ற மலையாளத் திரைப்படக் கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர் மம்மூட்டி, வெற்றியாளர்களில் மலையாளத் திரையுலகம் உயர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது என்று ஆங்கிலத்தில் ட்வீட் வெளியிட்டிருந்தார். 

உண்மையிலேயே மலையாளத் திரையுலகம், தமிழை விடவும் அதிக விருதுகளை வென்றுள்ளதா?

இதற்கு ஆம், இல்லை என இரு விதமாகவும் பதில் சொல்லலாம். 

ப்யூச்சர் ஃபிலிம் பிரிவில் (திரைப்படங்கள்) தமிழ்த் திரையுலகம் 10 தேசிய விருதுகளையும் மலையாளத் திரையுலகம் 8 தேசிய விருதுகளையும் வென்றுள்ளன. எனவே திரைப்படங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தமிழ்த் திரையுலகமே வெற்றியாளர். 

நான் ப்யூச்சர் ஃபிலிம் பிரிவில்  (குறும்படங்கள், ஆவணப்படங்கள்) மலையாளத் திரையுலகம் 3 விருதுகளைப் பெற்றுள்ளது. எனவே இந்தப் பிரிவில் அதுதான் ஜெயித்துள்ளது. நான் ப்யூச்சர் படங்களில் சிறந்த இயக்குநருக்கான விருதை ஆர்.வி. ரமணி பெற்றுள்ளார். ஓ தட்ஸ் பானு என்கிற படம் ஆங்கிலம், தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. எனவே இந்த விருது அனைவருக்கும் பொதுவானது என்று வைத்துக்கொள்ளலாம். 

திரைப்படப் பிரிவில் தமிழ்த் திரையுலகம் பெற்ற 10 விருதுகள்

1. சிறந்த தமிழ்ப் படம் - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
2. சிறந்த படம் - சூரரைப் போற்று
3. சிறந்த நடிகர் - சூர்யா
4. சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி 
5. சிறந்த பின்னணி இசை - ஜி.வி. பிரகாஷ்
6. சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்
7. சிறந்த துணை நடிகை - லட்சுமி ப்ரியா சந்திரமெளலி
8. சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா, ஷாலினி உஷா நாயர்
9. சிறந்த வசனகர்த்தா - மடோன் அஸ்வின்
10. சிறந்த அறிமுக இயக்குநர் - மடோன் அஸ்வின்

திரைப்படப் பிரிவில் மலையாளத் திரையுலகம் பெற்ற 8 விருதுகள்

1. சிறந்த படம் (சிறப்பு விருது)
2. சிறந்த மலையாளப் படம்
3. சிறந்த சண்டைக்காட்சிகளுக்கான இயக்கம்
4. சிறந்த கலை இயக்கம்
5. சிறந்த ஒலியமைப்பு 
6. சிறந்த பாடகி
7. சிறந்த துணை நடிகர்
8. சிறந்த இயக்குநர்

திரைப்படங்களுக்கான பிரிவில் தமிழ்ப் படங்கள் அதிக விருதுகளையும் (மலையாளத்தை விடவும் கூடுதலாக இரு விருதுகள்) குறும்படங்கள், ஆவணப்படங்களைக் கொண்ட நான் ப்யூச்சர் ஃபிலிம் பிரிவில் அதிக விருதுகளை மலையாளத் திரையுலகமும் வென்றுள்ளன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மலையாளத் திரையுலகம் 11 விருதுகளையும் தமிழ்த் திரையுலகம் 10 விருதுகளையும் வென்றுள்ளன (ஒரு விருதை இரு திரையுலகமும் பகிர்ந்துகொண்டுள்ளன).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தில்லியில் தோ்தல் உத்தரவாத போட்டியில் பெரிய கட்சிகள்!

சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ

SCROLL FOR NEXT