செய்திகள்

தடகள வீரருக்கு நிகராகப் பயிற்சி எடுத்த சூர்யா: சூரரைப் போற்று மேக்கிங் விடியோக்கள்

சூரரைப் போற்று படம் உருவானது எப்படி என்பது குறித்து சூர்யாவும் இயக்குநரும் சற்று விரிவாகப் பேசியிருந்தார்கள்.

DIN

ஒரு படத்துக்காக சூர்யா எந்தளவுக்கு மெனக்கெடுவார் என்பதைப் பார்க்கும் வாய்ப்பு சூரரைப் போற்று மேக்கிங் விடியோக்களின் மூலம் ரசிகர்களுக்குக் கிடைத்தது.

சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படம் 2020-ம் வருடம் தீபாவளிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூரரைப் போற்று, சூர்யாவின் 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்தார். இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.  

திரைப்படத் தேசிய விருதுகளுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து விருதுகளை சூரரைப் போற்று படம் அள்ளியது.

படம் வெளிவருவதற்கு முன்பு,  சூரரைப் போற்று படத்தின் மேக்கிங் விடியோக்கள் வெளியிடப்பட்டன. 19 வயது கதாபாத்திரத்துக்காக சூர்யா எந்தளவுக்கு மெனக்கெட்டார் என்பது ஒரு விடியோவில் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. தடகள வீரருக்கு நிகராகப் பயிற்சி எடுத்த காட்சிகள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. அடுத்து வெளியிடப்பட்ட விடியோவில், சூரரைப் போற்று படம் உருவானது எப்படி என்பது குறித்து சூர்யாவும் இயக்குநரும் சற்று விரிவாகப் பேசியிருந்தார்கள். அந்த விடியோக்களை மீண்டும் இப்போது காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

SCROLL FOR NEXT