முகப்பு
செய்திகள்

பாடகர் கே.கே. கடைசியாக பங்கேற்ற இசை நிகழ்ச்சி(விடியோ)

பிரபல பின்னணிப் பாடகா் கே.கே. செவ்வாய்க்கிழமை இரவு கடைசியாக பங்கேற்ற இசை நிகழ்ச்சியின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

பிரபல பின்னணிப் பாடகா் கே.கே. என்கிற கிருஷ்ணகுமாா் குன்னத்து (53), கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.

தெற்கு கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமாா் ஒரு மணி நேரம் பாடல்களைப் பாடினாா்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு அவா் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பியபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ள கே.கே., கடைசியாக பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் ரசிகர்களால் எடுக்கப்பட்ட விடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments